TNPSC Thervupettagam

ஆற்றல் சேமிப்புத் தளம்

July 1 , 2022 786 days 434 0
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் டங்ஸ்டன் போன்ற ஒரு நுண்ணிய, வெப்பத்தினைத் தாங்கக் கூடிய உலோக அடுக்குகளைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது மின்சாரப் போக்குவரத்து போன்றப் பயன்பாடுகளுக்கு அவசியமான இந்த மின் கலன்களின் செயல்திறனை மேம்படுத்தும்.
  • இது திட-நிலை லித்தியம் கொண்ட உலோக மின்கலன்களில் வேகமான மின்னேற்ற மற்றும் மின்னிறக்க விகிதங்களுக்கு வழிவகுக்கும்.
  • வழக்கமான லித்தியம்-அயனி கொண்ட மின்கலன்கள் ஒரு கிராஃபைட் நேர் மின் முனை, ஒரு திரவ மின்பகுளி மற்றும் ஒரு பரிமாற்ற உலோக எதிர்மின்முனை ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன.
  • இருப்பினும், திரவ மின்பகுளிகள் எளிதில் தீப்பற்றக்கூடியவையாகவும், அதிக வெப்ப நிலையில் சிதைந்து மோசமான ஆயுள் காலத்தினைக் கொண்ட மின்கலன்களாக உள்ளன.
  • மேலும், சில தீவிர நிகழ்வுகளில் மின்கலன்கள் தீப்பற்றக்கூடிய ஒரு வாய்ப்பிற்கும் வழி வகுக்கின்றன.
  • திரவ மின்பகுளிகளுக்குப் பதிலாக செராமிக் திட மின்பகுளிகளைப் பயன்படுத்தச் செய்வது பாதுகாப்பானதாகவும் ஒருமுறை மின்னேற்றுவதன் மூலம் அவை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்