நடை பயிற்சியின் போதோ அல்லது மித ஓட்டத்தின் போதோ கையசைவில் இருந்து ஆற்றலை தயாரிக்கக் கூடிய கைக்கடிகார அளவில் அணியக்கூடிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்னர்.
இக்கருவியினால், ஒரு தனிநபர் உடல்நலத்தை கண்காணிக்கும் அமைப்பை இயக்கும் அளவிற்கு போதுமான ஆற்றலை உருவாக்க முடியும்.
இது ஒரு படிக மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது, அழுத்தப்படும் போது மின்சாரத்தை தயாரிக்கவும். அல்லது மின்னூட்டம் செலுத்தப்படும்போது இது வடிவத்தை மாற்றும் தன்மையையும் கொண்டது. இது, ‘அழுத்தமின் விளைவு’ என்றழைக்கப்படுகிறது.