தெற்கு ரயில்வே ஆனது சென்னைக்கும் அரக்கோணத்திற்கும் இடையே புதிய ஆற்றல் திறனுள்ள மூன்று நிலை கொண்ட மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் ரயில்களை (Mainline Electric Multiple Unit - MEMU) அறிமுகப் படுத்தியுள்ளது.
இது ‘மீட்டாக்க நிறுத்த (braking) அமைப்பைக்’ கொண்டுள்ளது.
இது வேகமான முடுக்கம் மற்றும் எதிர் முடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது.
வழக்கமான எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் ரயில்கள் (EMU) மற்றும் MEMU ரயில்கள் ஆகியவையுடன் ஒப்பிடப்படும் போது இது 35 சதவீத ஆற்றலைச் சேமிக்கின்றது.