TNPSC Thervupettagam

ஆற்றுத் தகவல் அமைப்பு

February 12 , 2019 1986 days 525 0
  • கங்கை நதியின் மீது சரக்குப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பராக்கா மற்றும் பாட்னாவிற்கு இடையே ஆற்றுத் தகவல் அமைப்பின் இரண்டாவது பகுதியைத் துவக்கி வைத்தார்.
  • இந்த அமைப்பின் 2-வது பகுதி மேம்படுத்தப்பட்ட மற்றும் நிகழ்நேர தகவல் பரிமாற்றத்தின் மூலம் கரையில் இருக்கும் மையங்களுக்கும் நடமாடும் கப்பல்களுக்கும் இடையே துரிதமான மின்னணுத் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும்.
  • இந்தப் பிரிவு
    • துறைமுகங்கள் மற்றும் நதிகளில் உள்நாட்டுப் பயணப் பாதுகாப்பை மேம்படுத்துதல்
    • உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் சிறப்பான பயன்பாடு
    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
ஆகியவற்றிற்கு உதவிடும்.
  • இந்த அமைப்பு மத்திய கப்பல் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகின்ற சட்டப்பூர்வ அமைப்பான இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பின் கீழ் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்