TNPSC Thervupettagam

ஆலத்துடையான்பட்டி கோயிலில் தமிழ் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

December 12 , 2024 11 days 87 0
  • தமிழ்நாடு மாநிலக் கல்வெட்டுப் பிரிவு ஆனது, திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஆலத்துடையான்பட்டியில் உள்ள அருள்மிகு சோமநாதர் கோயிலில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளின் பொருளினைச் சமீபத்தில் அறிந்துள்ளது.
  • இந்தக் கல்வெட்டுகள் சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
  • தமிழில் எழுதப்பட்ட இந்த இரண்டு கல்வெட்டுகளும் மிகச் சமீபத்தில் வல்லுநர்களால் புரிந்து கொள்ளப் பட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டது.
  • ஒரு கல்வெட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திருஞானசம்பந்த பண்டிதர் கோயிலில் திருப்பணி நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்த தகவல் உள்ளது.
  • இது சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்தது.
  • மற்றொரு கல்வெட்டில் நாட்டார் வள்ளுவப்பாடி (நாட்டோலை) தேவர்கண்மி மற்றும் பெரியநாவலூர் அழகிய சோமேஸ்வரமுடிய நாயனார் கோவிலின் கணக்காளர் வறண்ட மற்றும் ஈர நிலங்களை வழங்குவதற்கான ஆணை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்