TNPSC Thervupettagam
December 3 , 2017 2422 days 835 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP – United Nations Environment Programme) “கழிவுகளுக்கு திடமான அணுகுமுறை ; எப்படி 5 நகரங்கள் மாசுபாட்டை தோற்கடிக்கின்றன“ (solid approach of waste ; how 5 cities are beating pollution) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • திட கழிவு மேலாண்மையை வெற்றிகரமாக கையாளும், UNEP-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து உலக நகரங்களுள் இந்தியாவின் கேரளாவிலுள்ள ஆலப்புழா நகரமும் இடம் பெற்றுள்ளது.
  • பிற நான்கு உலக நகரங்கள்
  • ஒசாகா (ஜப்பான்)
  • ஜீப்ல் ஜானா (Ljubljana) – ஸ்லோவேனியா
  • பெனாங் (மலேசியா)
  • கஜிகா (கொலம்பியா)
  • காயல் மற்றும் கடல் கழிமுகங்கள்    உடையதால் “கிழக்கின் வெனிஸ்“ என்றழைக்கப்படும் ஆலாப்புழா நகரமானது மையக்குவிப்பற்ற (அ) பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை முறையை (Decentralised Waste Management System) மேற்கொண்டு வருகின்றது.
  • நகரத்தின் வார்டுகள் அளவிலேயே உயிர்மட்கு கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு ஆங்காங்கே இருக்கும் சிறிய குப்பை உரமாக்கு நிலையங்களில் மட்கிடச் செய்து அதன் மூலம் பெறப்படும் உயிர் – எரிவாயு ஆனது குடியிருப்பு வாசிகளுக்கு அளிக்கப்படுகின்றது.
  • 2016-ல் ஆலப்புழா நகரமானது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் “தூய்மையான நகரம்“ என்ற விருதினைப் பெற்றுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்