ஒரிஸா மாநிலத்திலுள்ள கேந்திரப்பாரா மாவட்டத்தின் காஹிர்மாதா கடற்கரையானது உலகின் மிகப்பெரிய ஆலிவ் ரெட்லி (Olive Redley) ஆமை இனங்களின் இனப்பெருக்க மையமாகும்(rookery).
தற்போது இந்த அரிய வகை ஆலிவ் ரெட்லி (சிற்றாமை) ஆமைகள் முட்டையிடுவதற்கு வலையமைப்பதற்காக (Nesting) காஹிர்மாதா கடற்கரைக்கு பல்லாயிரக் கணக்கில் படையெடுத்துள்ளன.
ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடல் ஆமைகளிலேயே மிகச் சிறிய ஆமைகளாகும். இவை ஓர் அனைத்துண்ணிகளாகும்(omnivorous).
தென் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் போன்ற வெப்ப மண்டல கடல்களில் மட்டுமே இவை வாழக் கூடியவை.
இந்த ஆமைகள் அரிபடாஸ் (Aribadas) எனப்படும் ஒரே நேரத்திய ஒத்திசைவான, வெகுஜன எண்ணிக்கையில் முட்டையிடுதலுக்காக வலையமைக்கும் செயலுக்கு பெயர் பெற்றவை.
இவை ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை முட்டையிட வலையமைக்கும்.
இவற்றின் முட்டையிடும் பருவம் ஜீன் முதல் டிசம்பர் வரை என உலகம் முழுவதும் வேறுபடும். இவற்றின் உச்ச முட்டையிடும் பருவம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் ஆகும்.
இந்த ஆமைகள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN – International Union for Conservation of Nature) சிவப்பு பட்டியலின் (Red List) காப்பு நிலையில் (Conservation Status) ’அழிவாய்ப்பு இனம்‘ (Vulnerable) என பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் இவை வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகி வரும் இனங்கள் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) பிற்சேர்க்கை 1-ல் (Appendix – I) சேர்க்கப்பட்டுள்ளன.
ஒடிஸாவின் காஹிர்மாதா சரணாலயத்தின் ஒரு பகுதியான நாசி II தீவு (Nasi II Islands) ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிட வலையிடும் உலகின் மிகப் பெரிய பகுதிகளில் ஒன்றாகும்.
CITES உடன்படிக்கை வாஷிங்டன் உடன்படிக்கை என்றும் அழைக்கப்படும்.