TNPSC Thervupettagam

ஆலிவ் ரெட்லிகள் (சிற்றாமைகள்)

November 11 , 2017 2571 days 920 0
  • ஒரிஸா மாநிலத்திலுள்ள கேந்திரப்பாரா மாவட்டத்தின் காஹிர்மாதா கடற்கரையானது உலகின் மிகப்பெரிய ஆலிவ் ரெட்லி (Olive Redley) ஆமை இனங்களின் இனப்பெருக்க மையமாகும்(rookery).
  • தற்போது இந்த அரிய வகை ஆலிவ் ரெட்லி (சிற்றாமை) ஆமைகள் முட்டையிடுவதற்கு வலையமைப்பதற்காக (Nesting) காஹிர்மாதா கடற்கரைக்கு பல்லாயிரக் கணக்கில் படையெடுத்துள்ளன.
  • ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடல் ஆமைகளிலேயே மிகச் சிறிய ஆமைகளாகும். இவை ஓர் அனைத்துண்ணிகளாகும்(omnivorous).
  • தென் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் போன்ற வெப்ப மண்டல கடல்களில் மட்டுமே இவை வாழக் கூடியவை.
  • இந்த ஆமைகள் அரிபடாஸ் (Aribadas) எனப்படும் ஒரே நேரத்திய ஒத்திசைவான, வெகுஜன எண்ணிக்கையில் முட்டையிடுதலுக்காக வலையமைக்கும் செயலுக்கு பெயர் பெற்றவை.
  • இவை ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை முட்டையிட வலையமைக்கும்.
  • இவற்றின் முட்டையிடும் பருவம் ஜீன் முதல் டிசம்பர் வரை என உலகம் முழுவதும் வேறுபடும். இவற்றின் உச்ச முட்டையிடும் பருவம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் ஆகும்.
  • இந்த ஆமைகள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN – International Union for Conservation of Nature) சிவப்பு பட்டியலின் (Red List) காப்பு நிலையில் (Conservation Status) ’அழிவாய்ப்பு இனம்‘  (Vulnerable) என பட்டியலிடப்பட்டுள்ளன.
  • மேலும் இவை வன விலங்குகள் மற்றும் தாவரங்களின்   அருகி வரும் இனங்கள் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) பிற்சேர்க்கை 1-ல் (Appendix – I) சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஒடிஸாவின் காஹிர்மாதா சரணாலயத்தின் ஒரு பகுதியான நாசி II தீவு (Nasi II Islands) ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிட வலையிடும் உலகின் மிகப் பெரிய பகுதிகளில் ஒன்றாகும்.
  • CITES உடன்படிக்கை வாஷிங்டன் உடன்படிக்கை என்றும் அழைக்கப்படும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்