TNPSC Thervupettagam

ஆலிவ் ரெட்லி ஆமைகள் - ருசிகுல்யா

February 28 , 2018 2333 days 789 0
  • ஒடிஸா மாநிலத்தில் கன்ஜம் மாவட்டத்தின் ருசிகுல்யா நதியின் முகவாயிலில் (River Mouth), அரிய உயிரினமாக  கருதப்படும் ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக வெகுஜன அளவில் வளையமைத்து (Mass Nesting) வருகின்றன.
  • ஆலிவ் ரெட்லி ஆமைகளின் வெகுஜன முட்டையிடல் பருவமானது ஒரு தனித்துவமான நிகழ்வாகும். இந்நிகழ்வின்போது ஒவ்வொரு பெண் ஆமையும் சுமார் 100 முதல் 150 முட்டைகளை இடும்.
  • ருசிகுல்யா கடற்கரையானது உலகின் மிக முக்கிய ஆலிவ் ரெட்லி ஆமைகளின் வெகுஜன வளையமைப்பு இடமாக கருதப்படுகின்றது.

ஆலிவ் ரெட்லி ஆமைகள்   பற்றி

  • ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடல் ஆமைகளிலேயே மிகச் சிறிய ஆமைகளாகும். இவை ஓர் அனைத்துண்ணிகளாகும் (omnivorous).
  • தென் அட்லாண்டிக், பசுபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் போன்ற வெப்ப மண்டல கடல்களில் மட்டுமே இவை வாழக் கூடியவை.
  • இந்த ஆமைகள் அரிபடாஸ் (Aribadas) எனப்படும் ஒரே நேரத்திய ஒத்திசைவான, வெகுஜன எண்ணிக்கையில் முட்டையிடுதலுக்காக வளையமைக்கும் செயலுக்கு பெயர் பெற்றவை.
  • இவை ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை முட்டையிட வளையமைக்கும்.
  • இந்த ஆமைகள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN – International Union for Conservation of Nature) சிவப்பு பட்டியலின் (Red List) காப்பு நிலையில் (Conservation Status) ’அழிவாய்ப்பு இனம்‘  (Vulnerable) என பட்டியலிடப்பட்டுள்ளன.
  • மேலும் இவை வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகி வரும் இனங்கள் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) பிற்சேர்க்கை 1-ல் (Appendix – I) ல் சேர்க்கப்பட்டுள்ளன.
  • CITES உடன்படிக்கை வாஷிங்டன் உடன்படிக்கை (Washington Convention) என்றும் அழைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்