TNPSC Thervupettagam

ஆலோசகர் - நிதி ஆணையம்

May 7 , 2019 2031 days 3654 0
  • இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் 15-வது நிதிக் குழுவின் (FC - Finance Commission) ஆலோசக ஆணையத்தின் 12வது உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் நிதி ஆணையத்தின் “ஆய்வு வரையறைகள்” தொடர்பான எந்தவொரு குறிப்புகள் அல்லது தகவல்கள் மீது FCக்கு ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

நிதி ஆணையம்

  • 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 அன்று KC நியோகி தலைமையின் கீழ் முதலாவது நிதி ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
  • இது இந்தியக் குடியரசுத் தலைவரினால் சரத்து 280-ன் கீழ் ஏற்படுத்தப்படுகின்றது.
  • FC ஆனது மத்திய, மாநில மற்றும் மாநிலங்களுக்கிடையேயான வரி வருமானப் பங்கீடுகள் குறித்து முடிவு எடுக்கின்றது.
  • இது 5 ஆண்டு காலத்திற்கு அமைக்கப் படுகின்றது.
  • இது ஒரு தலைவர் மற்றும் இதர 4 உறுப்பினர்களை உள்ளடக்கிய 5 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
  • 15-வது நிதி ஆணையம் குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் https://www.tnpscthervupettagam.com/15th-finance-commission-constituted/ (தேதி: 11.17)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்