ஆல்பெர்டவெனேட்டர் கர்ரி என்ற பறவை போன்ற டினோசரின் தொல்படிவம் கண்டுபிடிப்பு
July 19 , 2017 2684 days 1111 0
ஆல்பெர்டவெனேட்டர் கர்ரி அல்லது கர்ரி ஆல்பர்ட்டா என்ற வேட்டையாடும் டினோசார் இனத்தின் புதைவடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நீல மற்றும் பழுப்பு நிறமுடைய உயிரினங்கள் 71 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கனடா நாட்டுப் பகுதியில் வாழ்ந்துள்ளன .
தற்பொழுது "ரெட் டீர் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படும் பகுதிகளில் நீண்ட காலம் புதையுண்டு கிடந்த இவற்றின் தொல்படிமம் தற்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆல்பெர்டவெனேட்டர் கர்ரி இன டினோசர்கள் இரண்டு கால்களில் நடந்துள்ளன. மேலும் அவற்றின் உடல் முழுவதும் இறகுகளால் மூடப்பட்டு இருந்தது. இந்த ஆய்வின் மூலமாக, கண்டறியப்படாத மேலும் பல இனங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.