TNPSC Thervupettagam

ஆல்ப்ஸ் மலையில் இந்தியக் கொடி

April 26 , 2020 1582 days 612 0
  • கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் வேண்டிய ஒரு வலுவான ஆதரவை வெளிப்படுத்த 1,000 மீட்டருக்கும் அதிகமான அளவில் இந்தியக் கொடியின் மூவர்ணத்தின் ஒளியானது சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட்டில் உள்ள மேட்டர்ஹார்ன் சிகரத்தின் மேல் காட்சிப் படுத்தப்பட்டது.
  • சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒளிக் கலைஞர் ஜெர்ரி ஹோஃப்செட்டர் மார்ச் இறுதி முதல் பல்வேறு நாடுகளின் கொடிகளை அங்கு காட்சிப்படுத்தி வருகிறார்.
  • மேட்டர்ஹார்ன் (4478 மீட்டர்) என்பது ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு சிகரமாகும்.
  • இது சுவிட்சர்லாந்திற்கும் இத்தாலிக்கும் இடையில் உள்ளது.
  • சில நேரங்களில் இது மலைகளின் மலை என்றும் குறிப்பிடப்படுகிறது, பொதுவாக மேட்டர்ஹார்ன் சிகரமானது ஆல்ப்ஸின் மலைத் தொடரின் ஒரு முக்கியச் சின்னமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்