அண்ணா பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான, கம்பிவழி இணைக்கப்பட்ட வான் வழி வாகனத்திற்கு இந்தியக் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
கம்பிவழியில் இணைக்கப்பட்ட வான்வழி வாகனம் என்பது தரையில் உள்ள ஓர் அமைப்புடன் இணைக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் வாகனமாகும்.
கெவ்லர் முலாம் பூசப்பட்ட கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் தரையில் உள்ள அமைப்பில் இருந்து இதற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்தப் புதுமையான கண்டுபிடிப்பானது, அதிகபட்ச உறுதித்தன்மையை வழங்கச் செய்வதோடு, மின்கலம் சார்ந்த வரம்புகள் போன்ற எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆளில்லா வான்வழி வாகனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது.
இந்த வாகனம் ஆனது ஆளில்லா வான்வழி வாகனத்தினைக் கம்பிவட இணைப்பின்றி இயக்கும் வகையில் ஒரு கலப்பின அமைப்பாகவும் செயல்பட கூடியது.
இந்தக் காப்புரிமை ஆனது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 08 முதல் 20 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.