பாதுகாப்புச் சோதனை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் ஆளில்லா வான்வழி வாகன அமைப்புகளின் (ட்ரோன்) பொதுச் சோதனை மையமானது தமிழ்நாட்டில் நிறுவப்பட உள்ளது.
இந்த மையமானது ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகலில் உள்ள சிப்காட் தொழில்துறைப் பூங்காவில் நிறுவப்பட உள்ளது.
இது தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தினால் (TIDCO) நிறுவப்படும்.
TIDCO என்பது தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தை (TNDIC) செயல் படுத்துவதற்கான தலைமை நிறுவனம் ஆகும்.
விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இந்திய அரசு தன்னிறைவு அடைவதில் தமிழக மாநில அரசு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க இந்தச் சோதனை மையம் உதவும்.