TNPSC Thervupettagam

ஆளில்லா விமானங்களுக்கான முதல் நிலையம்

December 8 , 2022 591 days 311 0
  • 1.5 கிலோ எடை கொண்ட மருந்துகளை தொலைதூர இடங்களுக்கு வான்வழியே விநியோகம் செய்ததன் மூலம், மேகாலயாவில் மருந்துகளைக் கொண்டு செல்வதற்கான ஆளில்லா விமானங்களுக்கான இந்தியாவின் முதல் நிலையம் திறக்கப் பட்டது.
  • ஒரு புத்தொழில் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட சர்டிபிளேன் X3 எனப்படும் ஆளில்லா விமானமானது, மருந்துப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு 36 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது.
  • அம்மாநிலத் தலைநகர் ஷில்லாங்கிற்கு அடுத்தபடியாக மேகாலயாவின் மிகப்பெரிய நகர்ப்புற மையமாக விளங்கும் துராவிலிருந்து 32 கிமீ தொலைவில் உள்ள ஜெங்ஜால் பகுதியானது மருந்துப் பொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களுக்கான ஓர் உத்திசார் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரமானது, சாலைப் போக்குவரத்திற்கு ஆகும் நேரத்தை விட கிட்டத்தட்ட 2 மணிநேரம் குறைவாகும்.
  • இந்த ஆளில்லா விமானமானது 4 கிலோ எடை வரை சுமந்து கொண்டு பறக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்