TNPSC Thervupettagam

ஆளில்லா விமானங்களுக்கான (Drones) விதிமுறைகள் – மத்திய அரசு

August 29 , 2018 2155 days 660 0
  • மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமானது தொலைமுறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் விமான அமைப்பிற்கான (Drones – ஆளில்லா விமானம்) விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
  • ஆளில்லா விமானத்தை பதிவு செய்தல் மற்றும் பயன்படுத்துவதற்காக ‘டிஜிட்டல் வான் தளம்’ (The Digital Sky Platform) என்ற டிஜிட்டல் செயல்முறையை இந்தியா உருவாக்கியுள்ளது.
  • இது நாட்டில் முதன்முறையாக ‘அனுமதி இல்லாமல், புறப்படக் கூடாது’ என்பதை செயல்படுத்தும் ஆளில்லா போக்குவரத்து மேலாண்மை தளமாகும் (UTM – Unmanned Traffic Management).
  • காற்றுவெளியானது
  1.  சிவப்பு மண்டலம் (பறப்பதற்கு அனுமதி இல்லை)
  2.  மஞ்சள் மண்டலம் (கட்டுப்படுத்தப்பட்ட காற்று வெளி)
  3.  பச்சை மண்டலம் (தானியங்குவதற்கான அனுமதி)

                   என்று பிரிக்கப்பட்டுள்ளது.

  • ஆளில்லா விமானங்கள் நானோ, நுண்ணிய, சிறிய, இடைநிலை மற்றும் பெரியவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • நானோ-வைத் தவிர தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (NTRO – National Technical Research Organisation), ARC (ARC- Airlines Reporting Corporation) மற்றும் மத்திய நுண்ணறிவு நிறுவனங்களுக்குச் சொந்தமான  அனைத்து ஆளில்லா விமானங்களுக்கும் “தனித்துவ அடையாள எண்” (UIN – Unique Identification Number) வழங்கப்படும்.
  • ஆளில்லா விமானப் பணிப்படையானது (The Drone Task Force) மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தலைமையில் அமைக்கப்பட்டது. இப்படை ஆளில்லா விமான விதிமுறைகள் 2.0 ற்கான பரிந்துரைகளை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்