ஆளில்லா விமானம் மூலம் நிலம் கணக்கெடுப்பு - கர்நாடகம்
July 17 , 2018 2416 days 710 0
முதன்முறையாக கர்நாடக மாநில அரசானது நிலம் மற்றும் சொத்துக்களைக் கணக்கெடுக்க ஆளில்லா விமானத்தை பயன்படுத்த இருக்கிறது.
ஆளில்லா விமானம் மூலம் நிலம் மற்றும் சொத்துக்களைக் கணக்கெடுக்க கர்நாடக அரசுக்கு இந்திய கணக்காய்வு நிறுவனம் (Survey of India) உதவும்.
இந்தக் கணக்கெடுப்பின் நோக்கமானது மிகவும் துல்லியத் தன்மையுடன் தற்பொழுது வரையான சொத்துக்களின் வரைபடத்தை 1/10 நேரத்தில் பெறச் செய்வதாகும். இதன் செலவு மரபுசார்ந்த கணக்கெடுப்பை விடக் குறைவானதாக இருக்கும்.