'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பிரிவுகளின் கீழ் 2024 ஆம் ஆண்டின் ஆளுநர் விருதுகளைப் பெற உள்ள நபர்களின் பெயர்களைத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இதயங்கள் (கோயம்புத்தூர் மாவட்டம்) மற்றும் ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை மாவட்டம்) ஆகியவை நிறுவனங்களுக்கான ‘சமூக சேவை’ பிரிவில் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
S. இராமலிங்கம் (சென்னை மாவட்டம்), J.ஸ்வர்ணலதா (கோயம்புத்தூர் மாவட்டம்), மற்றும் A. ராஜ்குமார் (மதுரை மாவட்டம்) ஆகியோர் இந்தப் பிரிவில் தனி நபர்களுக்கு ஆன விருதைப் பெற உள்ளனர்.
சிட்லபாக்கம் ரைசிங் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை மாவட்டம்) நிறுவனங்களுக்கான ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ பிரிவின் கீழ் இந்த விருதைப் பெற உள்ளது.