2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஜூலை 30 ஆம் தேதியை ஆள் கடத்தலுக்கு எதிரான வருடாந்திர உலக தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
இத்தினமானது ஆள் கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் அவர்களது உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆள் கடத்தல் என்பது கட்டாயத் தொழிலாளர் முறை மற்றும் பாலினச் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களைக் கடத்துகின்ற ஒரு குற்றமாகும்.
2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஆள் கடத்தல் : உன்னுடைய அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க குரல் கொடு” என்பதாகும்.