TNPSC Thervupettagam

ஆழமற்ற அலைப் படுகையில் அமைந்த ஆராய்ச்சி மையம்

January 9 , 2025 2 days 58 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை தேவைகளை மிக நன்கு பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான ஆசியாவின் மிகப்பெரியதொரு ஆழமற்ற அலைப் படுகை ஆராய்ச்சி மையத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தியத் துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடலோரப் பொறியியல் கட்டமைப்புகள் ஆகியவற்றில் உள்ள சவாலான பிரச்சனைகளை இது தீர்க்க இயலும்.
  • இது மிகச் சிக்கலான அலை மற்றும் நீரோட்ட இடையூறுகளைக் கையாளக்கூடிய பல் திசையிலான ஆழமற்ற அலைப் படுகை ஆகும்.
  • துறைமுகம், கடலோர, கடல்சார், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் மிகவும் ஆழமற்ற நீர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களுக்குப் இந்த அலைப் படுகைகள் பயன்படுத்தப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்