சர்வதேசக் கடல்சார் நிலப்பரப்பு ஆணையம் (ISA) ஆனது, கடல் நிலப்பரப்பில் சுரங்க நடவடிக்கையினை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் அதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காக ஜூலை மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
கோபால்ட், தாமிரம், நிக்கல் மற்றும் மாங்கனீசு போன்ற முக்கிய மின்கலப் பயன்பாட்டிற்கானப் கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்காக என்று ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இவை "பல்கனிம முடிச்சுகள்" என்று அழைக்கப்படும் உருளைக்கிழங்கு அளவிலான பாறைகள் வடிவில் இருக்கும்.
இவை ஆழ்கடலில் 4 கிலோமீட்டர் முதல் 6 கிலோமீட்டர் (சுமார் 2.5 மைல் முதல் 3.7 மைல்) ஆழத்தில் காணப் படுகின்றன.
ஜமைக்காவில் அமைந்துள்ள சர்வதேசக் கடல்சார் நிலப்பரப்பு ஆணையமானது கடல் சார் சட்டம் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின் கீழ் நிறுவப்பட்டது.
அதன் 167 உறுப்பினர் நாடுகளின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களுக்கு அப்பாற் பட்ட கடல் பரப்புகளின் மீதான அதிகாரத்தினைப் பெற்றுள்ளது.