TNPSC Thervupettagam

ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைகள்

April 9 , 2023 598 days 271 0
  • சர்வதேசக் கடல்சார் நிலப்பரப்பு ஆணையம் (ISA) ஆனது, கடல் நிலப்பரப்பில் சுரங்க நடவடிக்கையினை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் அதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காக ஜூலை மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
  • கோபால்ட், தாமிரம், நிக்கல் மற்றும் மாங்கனீசு போன்ற முக்கிய மின்கலப் பயன்பாட்டிற்கானப் கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்காக என்று ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
  • இவை "பல்கனிம முடிச்சுகள்" என்று அழைக்கப்படும் உருளைக்கிழங்கு அளவிலான பாறைகள் வடிவில் இருக்கும்.
  • இவை ஆழ்கடலில் 4 கிலோமீட்டர் முதல் 6 கிலோமீட்டர் (சுமார் 2.5 மைல் முதல் 3.7 மைல்) ஆழத்தில் காணப் படுகின்றன.
  • ஜமைக்காவில் அமைந்துள்ள சர்வதேசக் கடல்சார் நிலப்பரப்பு ஆணையமானது கடல் சார் சட்டம் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின் கீழ் நிறுவப்பட்டது.
  • அதன் 167 உறுப்பினர் நாடுகளின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களுக்கு அப்பாற் பட்ட கடல் பரப்புகளின் மீதான அதிகாரத்தினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்