சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டுப் பெண் பணியாளர்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்துக் காவல் நிலையங்களின் பொறுப்பும்,ஒரு நாளிற்குப் பெண் அதிகாரிகளுக்கு வழங்கப் பட உள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் பெண் அதிகாரிகள் தலைமை ஏற்கின்றனர்.
இது நமது சீருடைப் பணியாளர் பணிகளில் மகளிரின் பங்கினை அங்கீகரித்து, அவர்களைக் கௌரவித்துக் கொண்டாடுவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.