இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) தற்போது அட்டை வழங்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் ஆவணப்படுத்தப்படும் அட்டை விவரங்களின் குறியாக்கம் (CoFT) என்ற முறையை செயல்படுத்தியுள்ளது.
அட்டைதாரர்கள் குறியீடுகளை உருவாக்கி, பல்வேறு இணைய வர்த்தகப் பயன்பாடுகளுக்காக தற்போதுள்ள கணக்குகளுடன் இணைக்கும் வசதியை நன்கு மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு வணிகத் தளத்தில் சேமிக்கப்படும் அட்டை விவரங்கள் ஆவணப்படுத்தப்படும் அட்டைகள் (CoF) எனப்படும்.
தடையின்றிக் கிடைக்கப் பெறும் இந்தத் தகவல் ஆனது, பயனர்களின் நிதித் தரவின் பாதுகாப்பிற்குப் பாதகம் விளைவிக்கப் பயன்படுத்தப்பட கூடும்.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்திய ரிசர்வ் வங்கி குறியாக்கம் விதியை அறிமுகப் படுத்திய நிலையில் இதில் அட்டையின் விவரங்களுக்குப் பதிலாக என்று, பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குறியாக்கங்கள் வணிகத் தளத்தில் சேமிக்கப் படும்.