TNPSC Thervupettagam

ஆஸ்க்ளோபினாக் - கழுகுகள்

July 21 , 2019 1826 days 616 0
  • கால்நடைப் பயன்பாட்டிற்காக NSAID (Non-Steroidal Anti-Inflammatory Drug) ஆஸ்க்ளோபினாக்கைத் தடை செய்ய இந்திய அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
  • NSAID என்பது “ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து” என்பதாகும்.
  • ஆஸ்க்ளோபினாக் இந்தியக் கழுகுகளைக் கொல்லும் திறன் கொண்டது.
இதற்கு முந்தையத் தடைகள்
  • இந்திய அரசு கழுகுகளைப் பாதுகாப்பதற்காக 2008 ஆம் ஆண்டு ஜூலை அன்று கால்நடைப் பயன்பாட்டிற்காக டைக்ளோபினாக் மற்றும் அதன் கலவைகளைத் தடை செய்தது.
  • 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மருந்தை மனிதர்களுக்கு ஒற்றை அளவு உட்செலுத்து மருந்தாகப் பயன்படுத்த மட்டும் அனுமதிக்கப்படுகின்றது.
  • விலங்குகளுக்கு வலி நிவாரணியாக டைக்ளோபினாக் அளிக்கப்படுகின்றது.
  • ஜிப்ஸ் வகை கழுகுகள் இறந்த விலங்குகளின் உடலை உட்கொள்ளும் போது, இவை கடுமையான சிறுநீரகச் செயலிழப்பை எதிர்கொண்டு இறந்து விடுகின்றன. இவை இந்தியக் கழுகுகள் (ஜிப்ஸ் இண்டிகஸ்) என்றும் அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்