கால்நடைப் பயன்பாட்டிற்காக NSAID (Non-Steroidal Anti-Inflammatory Drug) ஆஸ்க்ளோபினாக்கைத் தடை செய்ய இந்திய அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
NSAID என்பது “ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து” என்பதாகும்.
ஆஸ்க்ளோபினாக் இந்தியக் கழுகுகளைக் கொல்லும் திறன் கொண்டது.
இதற்கு முந்தையத் தடைகள்
இந்திய அரசு கழுகுகளைப் பாதுகாப்பதற்காக 2008 ஆம் ஆண்டு ஜூலை அன்று கால்நடைப் பயன்பாட்டிற்காக டைக்ளோபினாக் மற்றும் அதன் கலவைகளைத் தடை செய்தது.
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மருந்தை மனிதர்களுக்கு ஒற்றை அளவு உட்செலுத்து மருந்தாகப் பயன்படுத்த மட்டும் அனுமதிக்கப்படுகின்றது.
விலங்குகளுக்கு வலி நிவாரணியாக டைக்ளோபினாக் அளிக்கப்படுகின்றது.
ஜிப்ஸ் வகை கழுகுகள் இறந்த விலங்குகளின் உடலை உட்கொள்ளும் போது, இவை கடுமையான சிறுநீரகச் செயலிழப்பை எதிர்கொண்டு இறந்து விடுகின்றன. இவை இந்தியக் கழுகுகள் (ஜிப்ஸ் இண்டிகஸ்) என்றும் அழைக்கப்படுகின்றன.