TNPSC Thervupettagam
May 9 , 2021 1206 days 607 0
  • கர்வானின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று முதன்முறையாக ஆஸ்டியோசைட்டுகளைக் கண்டறிந்துள்ளனர்.
  • ஆஸ்டியோசைட்டுகள் என்பது நீள்வட்ட வடிவிலான எலும்பு செல்களாகும்.
  • இவை எலும்புத் திசுக்களில் காணப்படுகின்றன.
  • ஆஸ்டியோசைட்டுகளின் ஒட்டு மொத்த அமைப்பினையும் இந்த ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக உருவாக்கியுள்ளனர்.
  • எலும்பின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதில் இந்த அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது வயதினைப் பொறுத்து மாறுகிறது.
  • ஆஸ்டியோசைட்டுகளுக்குள்ளே செயல்படும் பெரும்பாலான மரபணுக்கள் எலும்புகளில் எந்தவொரு பங்கும் வகிப்பதில்லை என ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்துள்ளனர்.
  • அதாவது அவை கட்டளைகளை மட்டுமே வழங்குகின்றன என அவர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • உண்மையில் எலும்புக் கூட்டினை எது கட்டுப்படுத்துகிறது என்பதைப் புரிந்து கெள்ள இந்தக் கண்டுபிடிப்பானது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்