- ஆஸ்திரேலியக் கோலா கரடி இனமானது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
- ஆஸ்திரேலியா தனது நாட்டின் வெப்பமான ஆண்டாக 2019 ஆம் ஆண்டை பதிவு செய்துள்ளது.
- ஆஸ்திரேலியக் கோலா கரடிகள் "அருகி வரும் இனங்கள்" என்ற நிலையிலிருந்து "ஆபத்தான இனங்கள்" என்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இனங்களின் 30% வாழ்விடங்கள் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்துகளால் அழிக்கப்பட்டுள்ளன.
- ஆஸ்திரேலியக் கோலா கரடி ஆனது ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தாவர உண்ணி வகை விலங்குகளாகும்.
- இவை நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதிகளில் காணப் படுகின்றன.
- ஆஸ்திரேலிய கோலா கரடிகள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலில் “பாதிக்கப்படக்கூடிய இனங்கள்” என்ற நிலையின் கீழ் வைக்கப் பட்டுள்ளன.
காட்டுத் தீ ஏன் கடுமையாக இருந்தது?
- இந்தியப் பெருங்கடல் இருமுனையானது 2019 ஆம் ஆண்டில் அதன் சாதகமான நிலையில் இருந்தது.
- இதன் பொருள், கிழக்கு இந்தியப் பெருங்கடல் (ஆஸ்திரேலியாவின் வடமேற்கில் அமைந்துள்ளது) மேற்கு இந்தியக் கடலை விட குளிராக இருந்தது.
- இந்நிகழ்வானது ஆஸ்திரேலியாவில் வெப்பநிலையை அதிகரித்து, அந்நாட்டின் ஈரப்பதத்தைக் குறைத்தது.
- ஆஸ்திரேலியக் கண்டத்தில் வீசும் சூடான காற்றான மேலைக் காற்றுகள் ஆனவை காட்டுத் தீயை மேலும் அதிகரித்தன.