டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் நிலை வகிக்கும் சர்வதேச முன்னணி டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் குரோசியா நாட்டினைச் சேர்ந்த ஆறாவது தரவரிசை வீரரான மரின் சிலிகோவை வீழ்த்தி தன்னுடைய 6வது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
இது இவரது 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
ரோஜர் பெடரர் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியை 6 முறையும், விம்பிள்டன் போட்டியை 8 முறையும், அமெரிக்கன் ஓபனை 5 முறையும் வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம்
டென்னிஸ் வரலாற்றில் கிராண்ட் ஸ்லாம் என்பது ஒரு வருடத்தில் நடைபெறும் 4 பெரிய டென்னிஸ் போட்டிகளின் தொடராகும்.
இந்த 4 பெரிய போட்டிகளும் மேஜர்ஸ் (Major) எனவும் அழைக்கப்படும். அவையாவன
ஆஸ்திரேலியன் ஓபன்
பிரெஞ்ச் ஓபன்
விம்பிள்டன்
அமெரிக்கன் ஓபன்
இந்த நான்கு பெரும் டென்னிஸ் தொடர்களை வெல்பவருக்கு கிராண்ட்ஸ்ஸாம் பட்டம் வழங்கப்படும்.
இந்த நான்கு போட்டிகளும் வெவ்வேறு வகையான டென்னிஸ் தரைகளில் ஆடப்பெறும்.
பிரெஞ்ச் ஓபன் போட்டியானது ஆனது களிமண் தரையில் ஆடப்பெறும்.
விம்பிள்டன் போட்டியானது புல்தரையில் ஆடப்பெறும்.
அமெரிக்கன் ஓபன் மற்றும் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகளானது கடின டென்னிஸ் தரைகளில் ஆடப்பெறும்.