TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி

January 8 , 2019 2021 days 554 0
  • இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் ஆஸ்திரேலியாவில் 71 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் டிராபியைத் தக்க வைத்துக் கொண்டது.
  • ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய நாடாகவும் ஒட்டு மொத்த அளவில் 5வது நாடாகவும் இந்தியா ஆகியுள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டனாக விராட் கோலி ஆகியுள்ளார்.
  • 1947ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போதிலும் இதுவரை எந்த தொடரிலும் வெற்றி பெற்றதில்லை.
  • சிட்னியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை பாலோ-ஆன் முறையை மேற்கொள்ளுமாறு செய்யுமாறு கேட்டு கொண்டதானது 1988-ல் ஆஸ்திரேலிய அணியானது பாலோ ஆன் முறையைத் தொடருமாறு கேட்டு கொள்ளப்பட்ட பிறகு ஏற்பட்ட முதல் முறையாகும்.

  • இந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியானது இந்தியாவின் 150-வது டெஸ்ட் வெற்றியாகும்.
  • ஆஸ்திரேலியா (384) இங்கிலாந்து (364), மேற்கிந்திய அணி (171), தென் ஆப்பிரிக்கா (162) ஆகிய அணிகளைத் தொடர்ந்து 150 வெற்றிகளைப் பெற்ற 5வது அணியாக இந்தியா மாறியுள்ளது.
  • சேத்தேஸ்வர் புஜாரா இந்த டெஸ்ட் தொடரின் சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடரில் அதிக பட்ச பந்துகளை எதிர்கொண்ட இந்திய மட்டை வீரராக முன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட்டை (1203) முந்தி புஜாரா (1258) சாதனை படைத்துள்ளார்.
  • ஆஸ்திரேலியாவில் 100 ரன்கள் எடுத்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 150-க்கும் அதிகமாக ரன்கள் எடுத்த 4வது விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் ஆகியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்