TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவில் 150 பொய் கொலைத் திமிங்கலங்கள்

February 24 , 2025 9 days 61 0
  • ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு தீவு மாநிலமான டாஸ்மேனியாவில் உள்ள தொலைதூர கடற்கரையில் 150க்கும் மேற்பட்டப் பொய் கொலைத் திமிங்கலங்கள் (False Killer Whales) கரையொதுங்கி சிக்கித் தவித்தன.
  • மிகவும் சாதகமற்றப் பெருங்கடல் மற்றும் வானிலை நிலைமைகள் ஆனது அந்தத் திமிங்கலங்களின் மீட்புச் செயல்முறையைத் தடுத்தன.
  • உரத்தச் சத்தங்கள், நோய், முதுமை, காயம், வேட்டையாடும் இனங்களிடமிருந்து தப்பி ஓடுதல் மற்றும் மிக கடுமையான வானிலை ஆகியவற்றால் ஏற்படும் திசை திருப்பல் ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கலாம்.
  • 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவின் கீழ்முனையில் உள்ள  கடற்கரையில் கரையொதுங்கிய பின்னர் 29 நீண்ட துடுப்பு வலவம் திமிங்கலங்கள் உயிரிழந்தன என்பதோடு மேலும் சுமார் 100 திமிங்கலங்கள் மீட்கப்பட்டன.
  • 2023 ஆம் ஆண்டில், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரையில் சுமார் 100 வலவம் திமிங்கலங்கள் கரையொதுங்கின.
  • 2022 ஆம் ஆண்டில், சுமார் 230 வலவம் திமிங்கலங்கள் மேற்குக் கடற்கரையில் உள்ள மெக்குவாரி துறைமுகத்தின் தெற்கே கரையொதுங்கின.
  • ஆஸ்திரேலிய நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய ஒரு நிகழ்வானது, 2020 ஆம் ஆண்டில் அதே துறைமுகத்தில் 470 நீண்ட துடுப்பு வலவம் திமிங்கலங்கள் மணல் திட்டுகளில் சிக்கிக் கொண்ட நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்