TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவுடன் துவாலு ஒப்பந்தம்

November 17 , 2023 246 days 205 0
  • இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக உதவுவதற்காக பசிபிக் தீவு நாடான துவாலுவிற்கு பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
  • பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பினை எதிர்கொள்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட இந்த உடன்படிக்கையானது பருவநிலை மாற்றத்திலிருந்து அந்தத் தீவைப் பாதுகாப்பதோடு அங்கு குடியேற்றத்தையும் அதிகரிக்கும்.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியாவில் துவாலு நாட்டு குடிமக்கள் வேலை செய்யவும், கல்வி பயிலவும் மற்றும் வாழ்வதற்கும் அனுமதிக்கும் வகையிலான சிறப்பு நுழைவு இசைவு சீட்டு விதிமுறைகளை ஆஸ்திரேலியா செயல்படுத்த உள்ளது.
  • இது அகதிகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டு அல்ல, மாறாக ஒவ்வோர் ஆண்டும் 280 துவாலு நாட்டு குடிமக்கள் (சுமார் 11,200 மக்கள் தொகையில்) ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடி பெயர அனுமதிக்கும் நுழைவு இசைவுச் சீட்டு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்