ஐரோப்பிய ஒன்றியம் ஆனது ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து செங்கடல் வழியாகப் பயணிக்கும் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக ஒரு கடற்படைத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
பண்டைய கிரேக்க மொழியில் "கவசம்" என்று பொருள்படும் ஆஸ்பைட்ஸ் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க பல உலக நாடுகள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.
ஹௌதி குழுக்கள் முதலில் தாக்கினால் மட்டுமே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதோடு, முன்கூட்டியே துப்பாக்கி சூடு நடத்த அதிகாரம் எதுவும் கிடையாது.
நவம்பர் மாதத்தில் இருந்து, ஹௌதி குழுக்கள் உலக வர்த்தகத்தில் 12 சதவீத வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் பரபரப்பான செங்கடலில் பயணிக்கும் வணிக மற்றும் இராணுவக் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.