சீரான ஊட்டச்சத்துடைய உணவின் தேவையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அனைத்து உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளை எளிதாக பெறுவதின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதும் இதன் நோக்கமாகும்.
இத்திட்டம் விஞ்ஞான பாரதி (விபா) மற்றும் உலகளாவிய இந்திய அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மன்றம் (Global Indian Scientist and Technocrats forum – GIST) ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.
இதன் குறிக்கோள், “நல்ல உணவு – நல்ல அறிவாற்றல்” என்பதாகும்.
“ஏராளமாக நிலவும் பசி மற்றும் நோய்கள்” என்றழைக்கப்படும் இந்தியாவும் ஒட்டு மொத்த உலகமும் எதிர்கொள்ளும் வித்தியாசமானப் பிரச்சினையை எதிர்கொள்ளச் செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 2021 ஆம் ஆண்டினை, சர்வதேசப் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
ஐ.நா.வின் 3வது நீடித்த மேம்பாட்டு இலக்கு, அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதலை உறுதி செய்தல் என்பதை வலியுறுத்துகிறது.