அஸ்ஸாம் மாநிலத்தில் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் உள்ள விலங்கினங்களின் பட்டியலில் கால்கள் இல்லாத இருவாழ்வி இனம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
அசாமின் வனவிலங்கு அதிகாரிகள் முதன்முறையாக புலிகள் வளங்காப்பகத்தில் கோடுகள் கொண்ட சிசிலியன் - சிறுகண் காலிலி (Ichthyophis spp) - இனம் இருப்பதாகப் பதிவு செய்துள்ளனர்.
கால்களற்ற நீர்நில வாழ்விகளான (இருவாழ்விகள்) இந்த சிசிலியன்கள் தங்கள் வாழ் நாளின் பெரும்பகுதியை மண்ணுக்கு அடியில் கழிக்கின்றன.
புலிகள் வளங்காப்பகத்தில் சுமார் 24 வகையான இருவாழ்வி இனங்கள் மற்றும் 74 வகையான ஊர்வன இனங்கள் உள்ளன.
இந்தியாவில் காணப்படும் சுமார் 29 வகையான கடல் ஆமைகள் மற்றும் நன்னீர் ஆமைகளில் 21 இனங்களும் இந்தப் பகுதியில் காணப்படுகின்றன.