ரஷ்ய நாட்டின் மற்றொரு இக்லா-S எனப்படும் மிகக் குறுகிய தூர வரம்புடைய வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகளை (VSHORAD) இந்திய ராணுவம் விரைவில் பெறத் தயாராக உள்ளது.
இது ரஷ்ய நாட்டினால் உருவாக்கப்பட்ட மனிதர்களால் சுமந்துச் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்பு (MANPADS) ஆகும்.
இது ஒரு தனி நபர் அல்லது குழுவினரால் இயக்கப்படக் கூடிய கையில் சுமந்துச் செல்லக் கூடிய வகையிலான பாதுகாப்பு ஆயுத அமைப்பாகும்.
இது தாழ்வாகப் பறக்கும் விமானங்களை வீழ்த்தும் வகையிலும், சீர்வேக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற விமான இலக்குகளை அடையாளம் கண்டு தடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 500 மீட்டர் முதல் 6 கிலோமீட்டர் வரையிலான தொலைவில் இயங்கும் திறனையும், 3.5 கிலோமீட்டர் உயரம் வரையுள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டுள்ளது.
இஸ்ரேலிய நாட்டின் இரண்டு ஹெர்ம்ஸ்-900 எனும் நடுத்தர உயர வரம்புடைய நெடு நேர இயக்க திறன் கொண்ட ஆளில்லா வான்வழி வாகனங்களையும் (UAV) இராணுவம் பெற உள்ளது.