TNPSC Thervupettagam

இக்லா-S விமான எதிர்ப்பு ஏவுகணைகள்

November 25 , 2023 238 days 183 0
  • இக்லா-S எனப்படும் கையில் எளிதாக வைத்துப் பயன்படுத்தக்கூடிய விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்கச் செய்வதற்காகவும், உரிமத்துடன் அவற்றை உற்பத்தி செய்ய அனுமதிப்பதற்காகவும் ரஷ்யா ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.
  • இக்லா-S என்பது மனிதர்களால் எளிதில் சுமந்து செல்லக் கூடிய வான் பாதுகாப்பு அமைப்பு (MANPADS) ஆகும் என்பதோடு, இது எதிரி விமானத்தை வீழ்த்துவதற்காக ஒரு தனிநபர் அல்லது படைப்பிரிவினரால் பயன்படுத்தப்பட இயலும்.
  • கையில் எளிதாக வைத்துப் பயன்படுத்தக் கூடிய இந்தப் பாதுகாப்பு அமைப்பு ஆனது, தாழ்வாக பறக்கும் விமானங்களை வீழ்த்தும் திறன் கொண்டது.
  • இது சீர்வேக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற வான்வழி இலக்குகளை அடையாளம் கண்டு எதிர்கொள்ளும்.
  • 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யா 45 சதவீதமும், பிரான்சு 29 சதவீதமும் மற்றும் அமெரிக்கா 11% சதவீதப் பங்கினையும் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்