TNPSC Thervupettagam

இங்கிலாந்தில் ப்ளியோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு

May 16 , 2023 430 days 250 0
  • இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரின் அபிங்டன் கவுண்டி ஹால் என்ற ஒரு அருங் காட்சியகத்தில் ப்ளியோசர் உயிரினத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • முதுகுத் தண்டில் மேற்கொள்ளப்பட்ட ஊடறிதல் ஆய்வில் இந்த ஊர்வன இனமானது 9.8மீ (32அடி) மற்றும் 14.4 (47அடி) வரை நீளமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
  • ப்ளியோசர் இனங்கள் ஒரு வகை குறுகிய கழுத்து கொண்ட ப்ளேசியோசர் இனமாகும்.
  • இந்தக் கடல் ஊர்வன இனங்களானது நீண்ட கழுத்து கொண்ட தங்கள் சக உயிர் இனங்களுடன் ஒப்பிடும் போது வேகமாக நீந்தும் வகையில் கட்டமைக்கப் பட்டுள்ளன.
  • அவை 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய (ட்ரையாசிக் காலம்) மற்றும் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய (கிரெட்டேசியஸ் காலம்) காலத்தில் வாழ்ந்தன.
  • அவை பெரும்பாலும் நவீன ஐரோப்பியப் பகுதிகளை உள்ளடக்கிய வரலாற்றுக்கு முந்தைய காலகட்ட கடல்பரப்புகளில் காணப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்