TNPSC Thervupettagam

இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் துணைப் பிரிவுகள்

September 1 , 2020 1419 days 766 0
  • தங்களது சமூகத்திற்குள்ளேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயன்களை அளிப்பதற்காக மாநிலங்களே பட்டியலிடப்பட்ட வகுப்பினர், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரைத் துணைப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இது பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 18% இடஒதுக்கீட்டிற்கு உள்ளேயே 3% இடஒதுக்கீட்டை அளிக்க வழிவகை செய்யும் தமிழ்நாடு அருந்ததியர்கள் சட்டம், 2009 என்ற சட்டமானது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்பதைக் குறிக்கும்.
  • இந்த அமர்வானது இந்திய உச்சநீதிமன்றத்தின் 2004 ஆம் ஆண்டுத் தீர்ப்பான E.V. சின்னய்யா எதிர் ஆந்திரப் பிரதேச மாநிலம் என்பதிலிருந்து வேறுபட்டு கருத்து கூறியுள்ளது.
  • 2009 ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசானது பட்டியலிடப்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள 74 பிரிவினர் கொண்ட பட்டியலில் 7 வகுப்பினரை ஒன்றிணைத்து அச்சமூகத்திற்கு சிறப்பு இடஒதுக்கீட்டை அறிமுகப் படுத்தியது.
  • இந்த உள் இடஒதுக்கீடானது நீதியரசர் ஜனார்த்தனன் தலைமையிலான ஆணையத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கையின் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்