மத்திய தொழில் பாதுகாப்பு படையானது (Central Industrial Security Force - CISF) படை வீரர்களின் நலனுக்காக 2020 ஆம் ஆண்டை “இடப்பெயர்விற்கான ஆண்டாகக்” கடைபிடிக்கின்றது.
இது குடியிருப்புப் பிரிவுகளை நிர்மாணித்தல் மற்றும் வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த இருக்கின்றது.
CISF
ஆரம்பத்தில் CISF படைப் பிரிவானது CISF சட்டம், 1968ன் கீழ் நிறுவப்பட்டது.
இது 1983 ஆம் ஆண்டில் சட்டத் திருத்தத்தின் கீழ் ஆயுதப் படையாக மாற்றப்பட்டது.
இது உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு அமைப்பாகும்.
இந்தப் படையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.