இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு இடையேயான இடம்பெயர்வு மற்றும் இயக்கக் கூட்டு ஒப்பந்தத்தில் (Migration and Mobility Partnership Agreement) கையெழுத்திட மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையே மக்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதில் (people-to-people -P2P) முக்கியமான மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடித் தன்மையுடையது (valid). கூட்டுப் பணிக்குழு (Joint Working Group-JWG) மூலம் ஒப்பந்தத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் இயங்குமுறையும் (Monitoring Mechanism) தானியங்கு புதுப்பிப்பு (Automatic renewal) வசதிக்கான கூறையும் இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.