உலக வங்கியானது சமீபத்தில் தனது இடம்பெயர்வு மற்றும் மேம்பாடு குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குப் பணம் அனுப்புவது 2020 ஆம் ஆண்டில் 1.9% குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இது 2020 ஆம் ஆண்டில் 540 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் 2019 ஆம் ஆண்டில் 548 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.
பணம் செலுத்தல் (வரவு) (Remittance) என்பது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்படும் மொத்தத் தொகையின் அளவாகும்.
இது வணிக வழங்கீடுகளாகவும் இருக்கலாம் (அ) குடும்ப உறுப்பினர், நண்பர்களுக்கு அனுப்பப்படும் பணமாகவும் இருக்கலாம்.
வெளிநாட்டுப் பணத்திற்கு எதிராக ஒரு நாட்டின் பண மதிப்பை நிலையாக வைத்திருக்க இவை உதவுகின்றன.
அந்நிய நேரடி முதலீட்டையடுத்து வளரும் நாடுகளுக்கான இரண்டாவது பெரிய மூலமாக இருப்பது பணம் செலுத்துதலே (வரவே) (Remittance) என்று உலக வங்கி கூறுகிறது.
பண வரவு அதிகரிக்கும் போது அதனைப் பெறும் நாட்டினுடைய பண மதிப்பு உயர்வதோடு வெளிநாட்டு பணத்தின் மதிப்பும் குறைகிறது.
குறிப்பு
2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவானது வெளிநாட்டிலிருந்துப் பணத்தைப் பெறுவதில் மிகப் பெரிய நாடாக உள்ளது
2020 ஆம் ஆண்டில்பணத்தை அனுப்புவதில் மிகப் பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது (68 பில்லியன் டாலர்)
2019 ஆம் ஆண்டில்இந்திய நாடானது 83.3 பில்லியன் டாலர் பணவரவினைப் பெற்று உள்ளது.
இது 2020 ஆம் ஆண்டில் 0.2% என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பண வரவானது 17% என்ற அளவிற்கு குறைந்துள்ளது.