இடம் பெயர்ந்த உயிரினங்களின் வளங்காப்புத் தொடர்பான உடன்படிக்கை குறித்த COP14
March 4 , 2024 265 days 242 0
இடம் பெயர்ந்த வனவிலங்குகளின் வளங்காப்புத் தொடர்பான உடன்படிக்கையின் பங்குதாரர்கள் மாநாட்டின் 14வது கூட்டம் (CMS COP 14) ஆனது உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது.
14 புலம்பெயர்ந்த இனங்களைப் பட்டியலிடுவதற்கான முன்மொழிவுகள் மற்றும் உலகளாவிய வனவிலங்குகளுக்கான பல தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள இந்த உடன்படிக்கையின் பங்குதாரர் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தப் பட்டியலிடல் ஆனது, இந்த இனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் வளங்காப்பு முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இடம் பெயர்ந்த உயிரினங்களுக்கு ஏற்படும் பல்வேறு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், வளங்காப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், அந்த இனங்கள் காணப்படும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த முன்மொழிவுகள் வலியுறுத்தியுள்ளன.
எண்ணிக்கைக் குறைவு மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் பல இனங்கள் 'எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்', 'அருகி வரும்' அல்லது 'மிக அருகி வரும் இனம்' என அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
இடம் பெயர்ந்த உயிரினங்களின் வளங்காப்பு தொடர்பான உடன்படிக்கையானது பான் உடன்படிக்கை என்று பிரபலமாக அறியப்படுகிறது.
1979 ஆம் ஆண்டில் கையெழுத்தான இந்த உடன்படிக்கை 1983 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.