TNPSC Thervupettagam

இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பொது இயக்குநர்

July 2 , 2018 2240 days 662 0
  • ஐ.நா.வின் இடம் பெயர்வு நிறுவனமான, இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் அடுத்த பொது இயக்குநராக போர்ச்சுக்கலின் அண்டோனியோ மேனுவல் டி கார்வெல்கோ பெரியிரா விட்டோரினா (61) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தற்போது பதவியில் உள்ள பொது இயக்குநர் வில்லியம் லேசி சுவிங் ஆவார். இவர் இரண்டாவது முறையாக ஐந்து ஆண்டுகளுக்கான பணியை நிறைவு செய்ய உள்ளார்  இப்பதவிக்கு அண்ட்டோனியோ மேனுவல் டி கார்வெல்கோ பெரியிரா விட்டோரினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் உயரிய பதவிக்கான தேர்தலில் (இரகசிய வாக்கெடுப்பின் மூலம்) விட்டோரினோ கோஸ்டா ரிக்காவின் லாரா தாம்சன் மற்றும் அமெரிக்காவின் கென் ஐசக்சை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
  • IOM (International Organisation for Migration) ஆனது ஐ.நா.வின் இடம் பெயர்வு நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா ஆகும்.
  • இரண்டாம் உலகப் போரில் இடம் பெயர்ந்த மக்களை மறுகுடியமர்த்த 1951-ல் ஐரோப்பிய குடியேற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவாக (ICEM-Intergovernmental Committee for European Migration) தொடங்கப்பட்டது.
  • ஐ.நா. பொது அவைக்கான பார்வையாளர் அந்தஸ்து 1992-ல் IOM-ற்கு வழங்கப்பட்டது. ஐ.நா மற்றும் இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றிற்கிடையேயான கூட்டுறவு ஒப்பந்தம் 1996-ல் கையெழுத்தானது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்