TNPSC Thervupettagam

இடர் குறித்த முன்னெச்சரிக்கை அனுப்பும் கருவி

January 24 , 2024 178 days 181 0
  • இஸ்ரோ நிறுவனமானது, மேம்படுத்தப்பட்ட இடர் குறித்த முன்னெச்சரிக்கை அனுப்பும் கருவியை (DAT) உருவாக்கியுள்ளது.
  • கடலில் உள்ள மீனவர்கள் மீன்பிடி படகுகளில் இருந்த படி அவசரச் செய்திகளை அனுப்பும் மேம்பட்ட திறன்களையும் அம்சங்களையும் கொண்டுள்ளது.
  • இந்தக் கருவியின் முதல் வடிவம் ஆனது, 2010 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இதனைப் பயன்படுத்தி தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மூலம் அனுப்பப்படும் தகவல், மத்தியக் கட்டுப்பாட்டு நிலையத்தில் (INMCC : இந்தியச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம்) பெறப்படுகிறது.
  • இங்கு மீன்பிடி படகின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த முக்கிய எச்சரிக்கை சமிக்ஞைகள் கண்டறியப் படுகின்றன.
  • இந்தத் தகவலைப் பயன்படுத்தி, இடர்பாட்டில் உள்ள மீனவர்களைக் காப்பாற்றச் செய்வதற்காக வேண்டி, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு MRCC ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்கிறது.
  • தற்போது வரை, 20,000க்கும் மேற்பட்ட DAT கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்