கிழக்கு லிபிய நகரமான டெர்னாவில் இரண்டு அணைகள் பேரழிவு விளைவிக்கும் வகையில் இடிந்து விழுந்தன.
டேனியல் என்ற அதிதீவிரப் புயல் வட ஆப்பிரிக்க நாட்டினைத் தாக்கியதை அடுத்து இந்த அணை இடிந்து விழுந்தது.
டெர்னாவில் நீரோட்டத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இரண்டு பெரிய அணைகள் இருந்த நிலையில் அவற்றில் ஒன்று 2002 ஆம் ஆண்டு முதல், முறையாக பராமரிக்கப் படவில்லை.
மேலும், இந்த அணைகள் மிகப் பெரிய அளவிலான அணைகளும் இல்லை என்ற நிலையில், அதில் முதல் அணை 70 மீட்டர் (230 அடி) உயரம் மட்டுமே கொண்டது.
அணைகள் உடைந்த போது 30 மில்லியன் கன மீட்டர், அதாவது 12,000 ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களுக்குச் சமமான தண்ணீர் வெளியேற்றப் பட்டு விட்டதாக நீர் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.