TNPSC Thervupettagam

இடைக்கால நிதிநிலை அறிக்கை 2024

February 3 , 2024 300 days 360 0
  • மக்களவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார்.
  • அவர் ஐந்து வருடாந்திர நிதிநிலை அறிக்கை, ஒரு இடைக்கால அறிக்கை உட்பட தொடர்ச்சியாக ஆறாவது நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து சாதனை படைத்தார்.
  • இதன் மூலம் தொடர்ச்சியாக ஐந்து நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப.சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ​​போன்றோரின் சாதனைகளை அவர் முறியடித்தார்.
  • மொரார்ஜி தேசாய், நிதி அமைச்சராகச் செயலாற்றிய போது, 1959-1964 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து வருடாந்திர பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்காலப் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
  • இறக்குமதி வரிகள் உட்பட நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கு ஒரே வரி விகிதங்களைப் பராமரிக்க வேண்டுமென அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் பெற்ற  தொகையினை விட குறைவாக ரூ. 14.13 லட்சம் கோடி மற்றும் ரூ. 11.75 லட்சம் கோடிகளை முறையே 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த மற்றும் நிகர அடிப்படையிலான தொகையினை அரசாங்கம் கடனாக பெறுகிறது.
  • 2024-25 ஆம் ஆண்டில் மூலதனச் செலவினங்களுக்கான செலவு தொகையானது, ₹11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 2025-26 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.5% ஆகக் குறைக்க தேவையான நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான பாதையில் அரசு தொடர்ந்து செயல்படும்.
  • வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டவோ உதவும் வகையிலான திட்டங்களும் தொடங்கப்படும்.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 1 புத்தொழில் தொடக்கங்களுக்குக்கான வரிச் சலுகைகள் மற்றும் அரசின் உத்தரவாதம் கொண்ட செல்வம் அல்லது ஓய்வூதிய நிதி ஆகியவற்றினைக் கொண்டு செய்யப்பட்ட முதலீடுகள் ஆகியவற்றிற்கான வரிச் சலுகைகள் 1 வருடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • FY25 ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறையானது சுமார் 5.1% என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில்,  FY24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை (5.8%) விட இது குறைவு ஆகும்.
  • FY24 ஆம் ஆண்டிற்கான கடன் தொகையான சுமார் ₹15.43 லட்சம் கோடியினை விட குறைவாக, அடுத்த நிதியாண்டிற்கான கடன் தொகையாக அரசாங்கம் ₹14.13-லட்சம் கோடியைக் கடனாகப் பெற உள்ளது.
  • FY25 ஆம் ஆண்டிற்கான பெயரளவு GDP வளர்ச்சியானது 10.5% என்று கணிக்கப் பட்டு உள்ளது.                                                                                                                                                                                                                                                                               
  • FY24 ஆம் ஆண்டில் ₹34.37 லட்சம் கோடியாக இருந்த நிகர வரி வருவாய் இலக்கானது, FY25 ஆம் ஆண்டில் 11.46 சதவீதம் அதிகரித்து ₹38.31-லட்சம் கோடியாக உள்ளது.
  • நேரடி வரி வசூல் இலக்கானது ₹21.99-லட்சம் கோடியாகவும், மறைமுக வரி குறித்த  இலக்கானது ₹16.22-லட்சம் கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2024-25 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகையானது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து, ₹109,493.08 கோடியினை எட்டியுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நிதிநிலையானது, கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ₹5.25 லட்சம் கோடியில் இருந்து 4.72 சதவீதம் அதிகரித்து ₹6.21 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது.
  • பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடானது ₹2,300 கோடியாக குறைந்துள்ளது.
  • 2024-25 நிதியாண்டில் வேளாண்துறை அமைச்சகத்திற்கு ₹1,27,469.88 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்காக ₹73,000 கோடிக்கு மேல் அரசு நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • உதவித் துறையின் மிகப்பெரிய பங்குத் தொகையான 2,068 கோடி ரூபாய்  பூடானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பழங்குடியினர் நல விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு ₹13,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இது முந்தைய நிதியாண்டை விட 70 சதவீதம் அதிகமாகும்.
  • அனைத்து ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டமானது விரிவுபடுத்தப்படும்.
  • மத்திய அரசானது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசியை ஊக்குவிக்கும் மற்றும் தாய் மற்றும் குழந்தை நலப் பாதுகாப்புத் திட்டங்களை ஒரு விரிவான திட்டமாக இணைக்கவுள்ளது.
  • கிராமப்புறங்களில் 30 மில்லியன் மலிவு விலை வீடுகளை கட்ட அரசு மானியம் வழங்கும்.
  • பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டித் தரும் அளவில் விரிவாக்கம் செய்யப்படும்.
  • வீடுகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் வகையில் குறைந்தபட்சம் 300 அலகுகள் மின் உற்பத்திக்கான கூரை மீதான சூரிய மின்சக்தி தகடுகள்  வழங்கப்படும்.
  • பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்களை அரசு வறுமையிலிருந்து மீட்டுள்ளது.
  • மத்திய அரசானது பல்வேறு திட்டங்கள் மூலம் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்கியதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
  • பிரதமர் ஜன்தன் யோஜனா கணக்குகள் மூலம் 34 லட்சம் கோடி ரூபாய்  நேரடிப் பயன் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் மூலம் 2.7 லட்சம் கோடி ரூபாய் சேமிப்புக்கு வழி வகுத்தது.
  • பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புறப் பெண்களுக்கு மிகவும் அதிக அதிகாரம் அளிப்பதற்காகவும், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் ‘லக்பதி திதி’ திட்டத்தினை அரசாங்கம் விரிவுபடுத்தும்.
  • பெண் தொழில்முனைவோருக்கு 30 கோடி ரூபாய் தொகையானது முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
  • மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பதவியேற்றவுடன் அடுத்த ‘முழு நிதி நிலை அறிக்கையானது’ ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்