தமிழ்நாட்டின் பள்ளி இடைநிற்றல் விகிதம் ஆனது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டங்களில் 0% ஆகக் குறைந்துள்ள நிலையில், இடைநிலைப் பள்ளி மட்டத்தில் இடை நிற்றல் விகிதம் 7% ஆக உள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்து வருகிறது என்பதோடு 2022-23 ஆம் ஆண்டில் 10.3% ஆக இருந்த இடைநிற்றல் விகிதம் ஆனது 7.7% ஆகக் குறைந்து உள்ளது.
தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதம் ஆனது, 10.9% என்ற தேசியச் சராசரியினை விடக் குறைவாக உள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் அறிக்கையின்படி, உலகளாவிய பள்ளி இடைநிற்றல் சராசரி விகிதம் 13% ஆகும்.
இங்கு ஆண் குழந்தைகளிடையே நிலவும் பள்ளி இடை நிற்றல் விகிதம் ஆனது பெண் குழந்தைகளிடையே உள்ள விகிதத்தினை விட தொடர்ந்து அதிகமாக உள்ளது என்ற ஒரு நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் இடைநிலைப் பள்ளி நிலையில் 4.4% ஆக இருந்த பெண் குழந்தைகளின் இடை நிற்றல் விகிதத்துடன் அதனை ஒப்பிடும் போது, ஆண் குழந்தைகள் மத்தியிலான இடைநிற்றல் விகிதம் 10.8% ஆக உள்ளன.
2014-15 ஆம் ஆண்டில், ஆண் குழந்தைகள் மத்தியில் பள்ளிப் படிப்பு இடைநிற்றல் விகிதம் சுமார் 16.1% ஆகவும், பெண் குழந்தைகள் மத்தியில் இந்த விகிதம் 8% ஆகவும் இருந்தது.