இந்திய வானியலாளர்கள் ஓர் அரிதான இடைநிலை நிறை கொண்ட கருந்துளையின் (IMBH) இயல்புகளைக் கண்டறிந்து அளவிட்டுள்ளனர்.
இது சுமார் 4.3 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள குறைவான ஒளிர்திறன் அண்டத்தில் அமைந்துள்ளது.
NGC 4395 அண்டத்தில் அமைந்துள்ள இந்தக் கருந்துளையானது, சூரியனின் நிறையை விட சுமார் 22,000 மடங்கு எடையுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு ஒளியியல் தொலைநோக்கி ஆன சுமார் 3.6 மீட்டர் தேவஸ்தல் ஒளியியல் தொலைநோக்கியை (DOT) பயன்படுத்தி மேற்கொள்ளப் பட்டது.