இந்த வகைக் குளவியானது சமீபத்தில் மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தினுடைய தோர் என்ற திரைப்படத்தில் ஹெய்டால் (கதாபாத்திரத்தின் பெயர்) என்பவராக நடித்ததற்காக அறியப்பட்ட இட்ரிஸ் எல்பா என்பவரது பெயர் இந்தக் குளவிக்கு சூட்டப் பட்டுள்ளது.
இது மற்றொரு பூச்சியின் முட்டைகளில் ஒட்டுண்ணியாக வாழ்வது கண்டறியப் பட்டுள்ளது.
பக்ராடா வண்டு என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பூச்சியானது, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த காய்கறிகளை அதிக அளவில் பாதிக்கின்ற ஒரு முக்கியப் பூச்சியாகும்.